Spread the love

சேலம் ஆகஸ்ட், 11

விநாயகர் சதுர்த்தி வரும் 31 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அப்போது, வீடுகள், கோயில்கள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது.

இதனால் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகளை தயாரிப்பதில், தமிழகம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வட மாநிலத் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆர்டரின் பேரில் மட்டுமே பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். விற்பனைக்காக, அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை தயாரித்து சுண்ணாம்பு மாவு, தேங்காய் நார், இயற்கை வர்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அச்சில் வார்த்து, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர்.

பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்து செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *