நெல்லை ஜன, 6
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் அரசின் அனைத்து வகையான நலத்திட்டங்களையும் பொதுமக்கள் அனைவரும் வாட்ஸ்அப் மூலம் எளிதாக தெரிந்துகொண்டு பயன்பெறும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள “சேவை.” என்ற வாட்ஸ்அப் சேவையினை தொழில்நுட்ப முறையில் தொடங்கி வைத்தார்கள்.