சென்னை ஜன, 4
கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும் என இயல் இசை நாடக மன்ற தலைவர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கலைமாமணி விருது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பிறந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். கலைமாமணி விருது தகுதியற்றவர்களுக்கும் வழங்கப்படுவதாக வழக்கு ஒன்றில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.