சென்னை ஜன, 5
ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கான ஜனவரி 11 ம்தேதி வெளியாகிறது. இந்நிலையில் துணிவு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனடையே துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகளையும், வடக்கன்ஸ் என்ற வார்த்தைகளையும் நீக்கம் செய்யும்படி படக்குழுவுனரிடம் தெரிவித்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.