ஆந்திரா ஜன, 2
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் இன்று முதல் 10 நாட்கள் தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் ஒன்பது இடங்களில் உள்ள கவுண்டர்களில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.