சென்னை ஜன, 2
வடகிழக்கு பருவமழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த பயிர்களுக்கு மாற்றாக புதிதாக நெற்பயிர்கள் பயிரிடப்படவில்லை என்பதால், அந்த பயிர்களை முழு சேதமடைந்ததாக கருத வேண்டும் என அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் அரசு வழங்கும் இழப்பீடு எந்த வகையிலும் போதுமானதல்ல என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஏக்கருக்கு ரூபாய் ரூ.30,000 வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.