சென்னை டிச, 27
ஜனவரி ஒன்பதாம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டமாகும். இதில் அமைச்சர் அந்தஸ்தில் உதயநிதி பங்கேற்பதால், அவருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ரகுபதி ஆகிய இருவருக்கும் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதன்படி உதயநிதிக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.