புதுடெல்லி டிச, 26
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் வாஜ்பாய் தொடர்ந்தான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் ராகுல் காந்தி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.