புதுடெல்லி டிச, 24
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து நடைபெற்ற 13 அவரும் அமர்வுகளில் மக்களவையில் 9 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேசிய அவர், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செல்லவே மக்களவை நிறைவு பெற்றதாக விளக்கம் அளித்தார். மக்களவை நேற்றுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.