புதுடெல்லி டிச, 24
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் இன்று காலை டெல்லியில் தொடங்கியது. ஹரியானாவில் பயணத்தை முடித்துள்ள ராகுல் இன்று காலை 6:30மணிக்கு டெல்லியில் நுழைந்துள்ளார். கமல்ஹாசனும் பயணத்தில் பங்கு பெற இருப்பதால் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. ஐம்பதாயிரம் வரையிலான மக்கள் இணைவார்கள் என காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி தெரிவித்துள்ளார். பயணம் நடக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் பயணத்தை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.