சென்னை டிச, 23
நலத்திட்ட பணிகள் தேர்தலுக்காக மட்டுமல்ல மக்களுக்காக எப்போதும் பணியாற்றி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் எதிர்க்கட்சி ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் நாம் நலத்திட்ட பணிகளை தொடர்கிறோம். அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அல்லும் பகலும் உழைத்ததால் மாண்டஸ் புயலின் போது மழைநீர் தேங்கவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.