சென்னை டிச, 18
மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய இவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் நடக்க உள்ள கூட்டத்தில் கட்சியினரை தவறாமல் பங்கேற்குமாறு வலியுறுத்தியுள்ளார்.