சென்னை டிச, 18
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி பொறுப்புகளுக்கு டிசம்பர் 28 க்குள் விண்ணப்பிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். மாவட்ட, மாநகர, நகர், பகுதி, ஒன்றியம், பேரூர் வரையிலான பொறுப்புகளுக்கு விளையாட்டில் ஆர்வமுள்ள கட்சியினர் மற்றும் வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்ப நகலை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடமும், மற்றொரு நகலை அண்ணா அறிவாலயத்துக்கும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.