நெல்லை ஜன, 2
தமிழக அரசு அலுவலர் ஒன்றியம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர்கள் அருணாச்சலம், சண்முக சுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இக்கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. எனினும் அகவிலைப்படியை 1-7-2022 முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 28 ம் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் மாடசாமி, மீனாட்சி, குமார், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.