வால்பாறை ஆகஸ்ட், 11
75-வது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டது. இது தவிர வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் 19 ஆயிரத்து 659 வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் பெரியகடை குடியிருப்பு பகுதியில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டது