ராமநாதபுரம் டிச, 31
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இஸ்லாமிய கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் தலைவர் எம்எம்கே முஹைதீன் இபுராஹிம் டெல்லி குர்காவுன் நகரில் நடைபெற்ற சிறந்த கல்வியாளர்களுக்கான சர்வதேச விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்ட்டு சிறந்த தாளாளருக்கான சர்வதேச அளவிலான விருதினை பெற்றார்.
இவர் தம் பள்ளியில் பயிலும் மாணவர்களை கல்வியில் மட்டும் ஊக்கம் செலுத்தாமல் பல்வேறு விதமான மாவட்டம், மாநில மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் தனித்திறன் சார்ந்த போட்டிகள் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்க மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து மாணவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.