புதுச்சேரி ஜன, 1
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட மக்கள் கடற்கரையில் அதிக அளவில் கூடினர். இதனால் நிலைமையை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் காந்தி சிலை அருகில் போடப்பட்ட இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். கடற்கரை சாலையில் 50,000 பேர் குவிந்ததால் செல்போன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டது.