புதுடெல்லி டிச, 31
இந்திய ஒற்றுமையாத்திரையின் போது ராகுலின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று டெல்லி காவல்துறையினர் உறுதி தெரிவித்தது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி காவல்துறையினரும் பங்கேற்று இருந்தனர். இதில் ராகுலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அங்கீகரிக்கப்படாத எவரும் அவரை நெருங்க முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.