ஆந்திரா டிச, 31
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அவருடன் திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் சேகர் ரெட்டி உடன் இருந்தார். பின் அன்னதான கூடத்திற்கு சென்ற அவர் குடும்பத்துடன் அன்னதானம் சாப்பிட்டார்.