விருதுநகர் டிச, 30
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 2,150 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49லட்சத்து 8 ஆயிரத்து 679 மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.