புதுக்கோட்டை டிச, 29
இந்து கோவில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். இது பற்றி அவர், சமீபத்தில் சேலத்தில் உள்ள கோவிலில் சாதி தீண்டாமை உடைத்தெறியப்பட்டதை போல், புதுக்கோட்டை கோவிலிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். புதுக்கோட்டை கோவிலில் சாதி தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடினேன் என்று கூறினார்.