சென்னை டிச, 27
சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் சொத்து வரி குறித்து மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளங்களை மேம்படுத்தவும் மாநகராட்சிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.