சென்னை டிச, 28
தமிழகத்தில் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சார கொள்முதலை தவிர்க்கும் வகையிலும் இத்திட்டத்தை மின்வாரியம் முன்னெடுக்கிறது. ஒரு மெகாவாட் சூரியசக்தி மின்ன உற்பத்தி நிலையத்தை அமைக்க 3.5 கோடி வரை செலவாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.