புதுச்சேரி டிச, 27
18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி உப்பளம் தொகுதியில் உள்ள சோனாம் பாளையம், வம்பாகீரப்பாளையம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிபால் கென்னடி கலந்துகொண்டு கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகம், பொருளாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், மணிமாறன், காலப்பன், செங்குட்டு தினேஷ், ரவிக்குமார், அறிவழகன், மாறன், ரகுமான் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.