திருப்பதி டிச, 28
ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.