சென்னை டிச, 26
18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 14 நாடுகளை தாக்கியது. இதில் 2,29,866 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 10,000 மேற்பட்டோர் இறந்தனர். ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் துயர சுவடுகள் மறையவில்லை. இதனால் இன்று சுனாமி நினைவுத்தூரில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.