சென்னை டிச, 26
தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன் பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஒன்றாம் தேதி மதுரை டூ சென்னை 2900 ரூபாய், கோவை டு சென்னை 3000 ரூபாய் நெல்லை டூ சென்னை 3500 ரூபாய் முதல் 4500 வரை திருச்சி டூ சென்னை 2500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.