சென்னை டிச, 25
உருமாறிய கொரோனா குறித்து அச்சம் வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை கூறினார். இது பற்றி அவர் கொரோனா பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கான 72 ஆயிரம் படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன், சிலிண்டர் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்ட சாதனங்கள் தேவையான அளவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.