சென்னை டிச, 25
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 26, 27 ம் தேதிகளில் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.