சென்னை டிச, 25
வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சரத்குமார், இந்த மாதிரி ஒரு மேடை கிடைக்காது. சூரியவம்சம் வெற்றி விழாவில் சொன்னேன். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று, கலைஞர் கூட இதை கேட்டுவிட்டு அப்போது ஆச்சரியப்பட்டார். ஆனால் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மனிதர் அவர் வாரிசு படம் நிச்சயம் ஹிட் ஆகும் என கூறினார்.