சென்னை டிச, 24
ஜேஇஇ தேர்வுக்கு 2020 முதல் 21 இல் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மதிப்பெண்களை பதிவிட தேவை இல்லை என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. கோவிட் காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க் சீட்டில் பாஸ் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால் அவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை தேசிய தேர்வுகள் முகமைக்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில் இந்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.