சென்னை டிச, 24
அனைத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்றுடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்தது. இதனை அடுத்து இன்று முதல் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. வீட்டுப்பாடம் தரலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.