சென்னை டிச, 24
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எத்தகைய சூழ்நிலையும் மேற்கொள்ளும் நிலையில் தமிழகம் உள்ளது வழிமுறைகளைப் பின்பற்ற மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.