சென்னை டிச, 23
ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் சொத்துக்களின் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது பற்றி அறிவிப்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் பெயரிலும், குடும்பத்தினர், பிற நபர்கள் பெயரிலும் உள்ள அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசின் உத்தரவின்படி ஜனவரி 31ம் தேதிக்குள் சொத்து விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.