ஈரோடு டிச, 24
ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு, வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் சிவ சண்முகராஜா கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் பொன்மணி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், கோபி வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர்ஷினி, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.