புதுடெல்லி டிச, 23
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜனவரி 1 முதல் 12 வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதன் காரணமாக பஞ்சாபில் பள்ளிகள் 10 மணிக்கு தான் திறக்கப்படுகின்றன. உத்தர பிரதேசத்திலும் பல பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது ராஜஸ்தானில் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட இருக்கின்றன.