ஹரியானா டிச, 22
ராஜஸ்தானில் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வந்த ராகுல் நேற்று ஹரியானா மாவட்டத்தில் நுழைந்தார். ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தூரத்தை 17 நாட்களில் கடந்த நிலையில் நேற்று ஹரியானாவில் நுழைந்த ராகுல் அடுத்த இரண்டு நாட்களில் 24ம் தேதி தலைநகர் டெல்லியில் பயணத்தை தொடங்குகிறார். அங்கு 7 நாட்கள் பயணிக்க உள்ளார். இந்த நிலையில் பயணத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பயணம் செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.