புதுடெல்லி டிச, 22
சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்ததால் மூத்த அதிகாரிகளுடன் இன்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஏற்கனவே இந்தியாவில் உருமாறிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். பொது இடங்களில் விதிமுறைகளைப் பின்பற்ற மத்திய அரசு கூறிய நிலையில் தமிழகத்திலும் விரைவில் ஆலோசனை நடக்கும் என தெரிகிறது.