நெல்லை டிச, 23
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் சட்ட மன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
அதனடிப்படையில் ஏர்வாடி பள்ளிக்கூட கழிப்பிட வசதி கட்டிட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரூபி மனோகரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ரீமா பைசல், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, ஏர்வாடி தி.மு.க. செயலாளர் சித்திக், ஏர்வாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள், ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.