சென்னை டிச, 23
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி மனித குலத்தை காப்பாற்ற வந்தவர் இயேசு. மற்றவர்களுக்காக வாழ்ந்தார். மனிதநேயத்திற்கும், மனிதர்களுக்காகவும் போராடிய இயேசு எந்த ஒரு மதத்திற்காகவும் பேசவில்லை. அவர் அனைவருக்கும் பொதுவானவர் சிலுவையில் அடித்தவர்களையும் மன்னித்தவர் என நிகழ்ச்சியாக பேசினார்.
