சென்னை டிச, 22
மாண்டஸ் புயல் காரணமாக கடந்த பத்தாம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் வனத்தொழில் பழகுனர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் வரும் 27ம் தேதி முற்பகல், பிற்பகல் என இரு வேலைகளில் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.