கிருஷ்ணகிரி டிச, 21
பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலை வகித்தார்.