கிருஷ்ணகிரி டிச, 16
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்கம் சார்பில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, pமண்பானை மற்றும் மண் அடுப்பை வழங்கக்கோரி, பொங்கல் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினர்.