கேரளா டிச, 19
சபரிமலையில் மண்டல விளக்கு பூஜைக்காக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 90,000க்கு மேல் பக்தர்களின் வருகையை குறைக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் புக்கிங்கில் 90,000 மேல் ஆன்லைன் புக் செய்வோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று வதந்தி பரவியது. இந்நிலையில் வழக்கம்போல் புக்கிங் செய்யலாம் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என திருவாதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.