மும்பை டிச, 19
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சந்திர சூட்டுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அதில் பேசிய சந்திர சூட் 1975 இல் அவசர காலத்தின் போது மங்கலான சுதந்திர ஜோதியை ரானே போன்ற நீதிபதிகள் காத்தனர். அக்காலத்தில் நீதிமன்றங்களின் சுதந்திரம் குறித்த அச்சமற்ற உணர்வு தான் ஜனநாயகத்தை காப்பாற்றியது. சுதந்திர ஜோதியாக இருக்கும் நீதிமன்றங்கள் அவ்வாறே நிலை நிற்கும் என பெருமிதம் தெரிவித்தார்.