நெல்லை டிச, 18
நெல்லை மாவட்டத்தில் காவல்கிணறு தினசரி சந்தைக்கு வள்ளியூர், ராதாபுரம்,நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அதிகளவு வாழைத்தார்கள் வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சந்தைக்கு இன்று வாழைத்தார்கள் குறைவாக வந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்ற வாரம் நாட்டு வாழைத்தார் ரூ.300-க்கு விற்பனையானது.தற்போது ரூ.600-க்கும், ரூ.500-க்கு விற்பனையான மட்டி வாழைத்தார் ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்பனையான ரசக்கதளி ரூ.700-க்கும், ரூ.600-க்கு விற்பனையான செவ்வாழை தற்போது ரூ.900 முதல் ரூ.1,100 வரை விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.