நெல்லை டிச, 17
நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ். ஐ நியூ சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி சபை ஊழியர் சுஜின் தலைமையில் நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளான கோவில்பத்து, களக்காடு பழைய பஸ் நிலையம், நான்குநேரி பிரதான சாலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கிறிஸ்துமஸ் கீதங்கள் பாடியவாறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சென்று வீடுகள் தோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கினர்.
இதில் தன்ராஜ், கலைச்செல்வன், ராஜன், வில்சன், ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து பவனி சென்றனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.