தேனி டிச, 16
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் மாருதி ரெஸ்டாரண்ட், முத்துட் பைனான்ஸ் நிறுவனம், மகிழ்நீதி பைனான்ஸ் நிறுவனம், பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் இயங்கும் என்.ஆர்.டி டிரஸ்ட், வாய்ஸ் டிரஸ்ட் மதுரை இன்னோவிட்டார் நிறுவனம், ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் உட்பட 20 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்களை தேர்வு செய்தனர்.
மேலும் இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்தனர் 10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்றனர் . மேலும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயண மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள் கல்லூரி பெண்கள் இளைஞர்கள் என ஏராளமான ஆர்வத்துடன் பங்கேற்றனர்.