திருச்சி டிச, 15
திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நடந்தது.
இதில் காவல்துறை மற்றும் புலனாய்வில் பிற துறைகளில் உள்ள நிலுவை வழக்குகள் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது. போதை ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான , பொதுவான குற்றங்கள் தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அனைவருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.