Spread the love

நெல்லை டிச, 15

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28 ம் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியானது 31.12. 2022 வரை தொடர்ந்து நடைபெறும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்தின் சார்பாக பிரசார வாகன பேரணி தொடக்க விழா நடைபெற்றது.

இந்த பிரச்சார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வள்ளியூர் கோட்டம் வளன்னரசு, வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனமானது வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *